கோவையில் வருவாய்த்துறை சார்பில் ரூ.23 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் பங்கேற்பு

கோவையில் வருவாய்துறை சார்பில் ரூ.23.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.



கூட்டத்திற்குப் பின், வருவாய்த்துறை சார்பில், 34 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.



51 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையும், 11 பயனாளிகளுக்கு உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி என பல்வேறு துறையின்கீழ், 111 பயனாளிகளுக்கு சுமார் 23 லட்சத்து 19 ஆயிரத்து 319 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.



இந்த நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் ஆணையாளர் பிரபாகர், நில நிர்வாக ஆணையாளர் நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையாளர் வெங்கடாச்சலம், வாருவாய் நிர்வாகம் இணை ஆணையாளர் ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சியர் சமீரன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...