ஆன்லைன் ரம்மி விவகாரம் - கோவையில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் கோப்பில் கையெழுத்திடாத ஆளுநரைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவருவதாகக்கூறி, அந்த விளையாட்டிற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்துவருகிறது. இந்த விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வகை செய்யும் கோப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை கையெழுத்திடவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.



அந்த வகையில், கோவை காந்திபார்க் பகுதியில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைக்கு கையெழுத்திட வேண்டும் அல்லது மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



சீட்டுக்கட்டு விளையாட்டில் உள்ள அட்டைகளைபோல் மாதிரி பதாகைகளை ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...