'தமிழ்நாடு எல்லையில் கேரளா அரசு சர்வே பண்ணக் கூடாது..!' - கோவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாடு எல்லையில் கேரளா அரசு சர்வே பண்ணக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு.


கோவை: கோவை மாவட்டத்தில் நிறையத் தொழிற்சாலைகள் அமைக்கவுள்ளதால், தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:

ஆர்டிஓ அலுவலகங்களுக்கோ, தாலுகா அலுவலகங்களுக்கோ மக்கள் அலையாதபடி ஆன்லைன் சேவை அதிகப்படுத்தவும், விமானநிலைய பணிகள், சிப்காட் பணிகள் நில எடுப்பு பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நிறையத் தொழிற்சாலைகள் வர வேண்டும். ஆகவே தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். முதியோர் பென்சன் யாருக்கும் தடையில்லாமல், வழங்க உத்தரவிட்டுள்ளோம். அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் புதிதாக 6,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதை வழங்குவதாக அமைச்சரிடம் வாக்குறுதி அளித்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளது. ஆனால் 11 தாலுகா அலுவலகங்கள் தான் உள்ளது. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் இருப்பது பணி செய்யாத சூழலை ஏற்படுத்துகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதைக்கருத்தில் கொண்டு வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொடரில் நம்முடைய மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவாய் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியைச் செய்து கொடுப்போம்.

மேலும் வருவாய்த்துறை ஆய்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனம் செலுத்துகிறார்.

பட்டா, வாரிசு, முதியோர் தொகை என ஏதுவாக இருந்தாலும் 15 நாளுக்குள் தீர்வு கிடைக்கும். மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இ-சேவை மையம் குறைவாக உள்ளது மட்டுமில்லாமல், அங்கு சில தவறுகள் நடக்கிறது அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளா அரசு தமிழ்நாடு எல்லையில் நிலங்களை சர்வே பண்ண வரும் பொழுது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது எனக் கேரள அரசுக்குத் தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார், என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...