சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 64-வது வார்டு, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் சில தனியார்களால் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கோவை மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர இயங்குவது இல்லை. 

இதனால், அப்பகுதி மக்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மைதானத்தை சுற்றிவளர்ந்துள்ள புதர்களையும் அகற்றி, விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...