கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முதல் முறையாகச் சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள மைதானத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு.


கோவை: தமிழநாட்டில் உள்ள சிவாலயங்களில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். இதன் காரணமாக பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மற்றும் ஏனைய சிவாலயங்களில் சிவராத்திரி நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள கபாலீசுவரர் திருக்கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை, நெல்லையப்பர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய 5 கோவில்களில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

இந்நிலையில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சார்பாக அக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது நிகழ்ச்சி மேடைகள் அமைய உள்ள இடம், அதே பகுதியில் யானை குளிப்பதற்காகக் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, அங்கிருந்த கோவில் கிணற்றையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.



அப்போது அதிகாரிகளிடம் வரும் 24ஆம் தேதி 5 கோவில் செயல் அலுவலர்கள், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...