மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழைக் காலங்களில் சிறப்பாக பணிகளை மேற்கொண்ட அனைத்து அலுவலர்களை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பாராட்டு.


நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை தொடர்பாகவும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தலைமை தாங்கினார், மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் முன்னிலையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் மழைக் காலங்களில் மழையினால் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளை மழைக் காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகளில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் செயல்படத் தொடர்ந்து ஒத்திகை பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை திட்டமிட்டுச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது சிறப்பாக பணியாற்றிய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் லஸ்கராக பணிபுரிந்து பணியிலேயே உயிரிழந்த உதகை ஆடாசோலை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் யோகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.



முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறையின் சார்பில், அரசுத் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள பதாகை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பதிவேடுகள் வைப்பு அறை, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பணிகள் மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இக்கூட்டத்தில் சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர்.மோனிக் காராணா, மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்நவாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (உதகை), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), பூஷணகுமார் (குன்னூர்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது) உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...