கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் வழக்கு - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கோவை பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்த கூட்டுறவுச் சங்க எழுத்தருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1993 - 1994 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.9 ஆயிரம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததது.

இது குறித்து கூட்டுறவுச் சங்க துணைப்பதிவாளர் மகேந்திரன் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கடந்த 1995இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001இல் விசாரணை துவங்கியது. இந்த வழக்கில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் கூட்டுறவு செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் சுந்தரம், தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை ஜே.எம்-4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார். மேலும் விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...