கோவை அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்


à®….தி.மு.க  à®ªà¯Šà®¤à¯à®šà¯ செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

அ.தி.மு.க -வில் ஒரு பிரிவினர் சசிகலாவிற்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட à®….தி.மு.க  à®µà®´à®•்கறிஞர்கள் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்ற உறுதுணையாக இருப்போம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், à®….தி.மு.க  à®šà®Ÿà¯à®Ÿà®®à®©à¯à®± உறுப்பினர்கள் நெருக்கடியான சூழலில் விடுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...