கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை - கண்ணீர்மல்க குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவையில் பெட்ரோல் ஊற்றி ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (50). லோடு ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று காலை நண்பர் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடிரென ரவி மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தீ வைத்தார். இதில் ரவி படுகாயம் அடைந்தார்.

இதைப்பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ரவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேருநகரை சோ்ந்த கூலித்தொழிலாளி பூபாலன் (40) என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் பூபாலனை கைது செய்தனர்.



இந்நிலையில் உயிரிழந்த ரவியை கொலை செய்ய தூண்டியவர்களை கண்டுபிடிக்க வேண்டும், இறந்தவருக்கு இரண்டு மகள் உள்ளதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரவியின் இரண்டு மகள்கள், மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதையடுத்து ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் புகார் மனு அளித்து முறையிட்டனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...