இதய தெய்வம் மாளிகையில் தொண்டர்கள் இல்லாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்


கோவையில் இதய தெய்வம் மாளிகையில் அதிக அளவில் தொண்டர்கள் இல்லையென்றாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். à®….தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 



சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட முடியாது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது குற்றவாளி சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது.



சசிகலா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து 4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியதை அடுத்து சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...