கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கிக் கடன் பெற்ற வழக்கு - முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை!

கோவையில் கனரா வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கி கடன் பெற்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சாமாளாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி மற்றும் மாரப்பன். ஜவுளி தொழில் நடத்திவரும் இவர்கள், விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்பித்து ரூ.9.97 லட்சம் கனரா வங்கியில் கடன் பெற்றனர். அந்தத் தொகையை மாற்று தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40,000 அபராதமும், ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கியதால் கனரா வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.80,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...