'ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு' - கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில் 'ஜாப் ஒர்க்' மட்டும் பெற்று தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேலிடம் கேட்டபோது,



வேளாண் துறையில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுவதைப்போல, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட வேண்டும். தனி நபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி திட்டத்தில் 5 மற்றும் 12 சதவீதம் என இரு வகையான வரி விதிப்பு மட்டுமே அமலில் இருக்க வேண்டும். ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் (கொசிமா) தலைவர் நல்லதம்பியிடம் பேசியபோது,



இயந்திரம் வாங்குவதற்கு முன்பு வழங்கப்பட்டுவந்த மானியம் 2020-ம் ஆண்டுக்குபின் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஜாப் ஒர்க்’ செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.

வங்கிகளில் நடப்பு மூலதன கடன்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 சதவீத வட்டி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருடாந்திர விற்பனை அடிப்படையில் 25 சதவீதம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு சிறப்பு மானியம் வழங்கவேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...