திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.74.39 லட்சம் விற்பனை

திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி ரூ.74.39 லட்சத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 327 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், பங்கேற்றனர்.

இந்த மறைமுக ஏலத்தில் பருத்திக்கான அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,662-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், குறைந்தபட்ச விலையாக ரூ.6,400க்கும், சராசரி விலை ரூ.7,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்தில், 2945 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி, 74 லட்சத்து 39ஆயிரத்து 959 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த மறைமுக ஏலத்தில் 9 வியாபாரிகள் கலந்து கொண்டதாக திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...