காரமடையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை மாவட்டம் காரமடை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கரியமலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்த கல்குவாரி அமைந்தால் சுற்றுவட்டாரப்பகுதியில் நீர்வளம், சுற்றுச்சூழல் மாசு, உடல்நலப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.



இந்நிலையில், தனியார் நிலத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தைச் சுற்றி மங்கலகரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த கல்குவாரி அமைந்தால், அங்கு பாறையை தகர்க்க வெடி வைக்கும்போது தூசி எழுவதோடு, நில அதிர்வு ஏற்படும். அதோடு, எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் குவாரி அமைப்பதாகக் கூறப்படும் வழியாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மலைப்பகுதியில் வெடிவெடிக்கும்போது கற்கள் சிதறி விழும் அபாயமும் உள்ளது. உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ள இந்த குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...