நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்!

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு.



கோவை: தமிழகத்தில் உணவகங்கள் மீது உணவின் தரம், கலப்படம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த உணவு பகுப்பாய்வு வாகனங்கள் முதல் கட்டமாக கோவை சேலம் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.



அதன்படி, கோவை வந்த நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உட்பட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 30 வகையான உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய முடியும். மேலும், கலப்படம் குறித்த விளக்க படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உணவு பகுப்பாய்வு வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...