பழனிக்கு பாதயாத்திரை - கோவையில் இருந்து துவங்கினார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்!

கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக இன்று புறப்பட்டார். பாத யாத்திரையை மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார்.



கோவை: பழனி முருகன் கோயில் பாதயாத்திரையை கோவை ஈச்சனாரி கோயிலில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்.



கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பாதயாத்திரையை துவங்கினார்.

இதில் அவரது பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் கோவை, திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டும் வெற்றிவேல் வீரவேல் முழக்கமிட்டும் வழி அனுப்பினர்.



இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இதில் வானதி சீனிவாசனுக்கு வேல் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...