தென்னை விவசாயத்தை பாதுகாக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை!

தென்னை விவசாயத்தைப் பாதுகாக்கும் விதமாக, பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.



கோவை: தென்னை விவசாயத்தைக் காக்க அதிகாரிகளுக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாகக் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:



கடந்த 60 ஆண்டு காலமாக பிஏபி நீரை நம்பி பிரதான கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்குக் கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் கொடுத்த புகாரின் பேரில், பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.



இதனால் நீண்ட கால நிலை பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதான கால்வாயில் கரையோர விவசாயிகளும் விவசாயிகளே என்பதைக் கருத்தில் கொண்டு பிஏபி பாசனத் திட்டத்தைப் பலப்படுத்த நீர் ஆதாரத்தைப் பெருக்க பல்வேறு வழியில் உள்ளதைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலமைச்சர் மூலம் விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயச் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கிருஷ்ணசாமி, ராமசாமி, ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...