'ஜவுளி துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும் மத்திய பட்ஜெட்' - மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் வருத்தம்

மத்திய பட்ஜெட்டில் பருத்தி இறக்குமதி வரி ரத்து அறிவிப்பு இல்லாதது ஜவுளி துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், நடப்பு கூட்டத்தொடரிலேயே இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கருத்து.


கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்கத்தக்க பட்ஜெட் என ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி தலைவர் ஆடிட்டர் கார்த்திகேயன் கூறியதாவது:

வளர்ச்சியை எதிர்நோக்கி நீண்டகால திட்டங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது. பெரும்பாலான உலக நாடுகளில் பொருளாதார சவால் உள்ள நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் முக்கிய பார்வையில் இருக்கும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையை ஊக்குவிக்கும் விதமான திட்டங்களை உள்ளடக்கிய விதத்தில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது வேலையில்லா குறியீடு 8.3% அளவில் உள்ளது. இதை எதிர்நோக்கும் விதத்தில் உள் கட்டமைப்பு, ரயில் திட்டங்கள், விமான நிலையங்கள் போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஒதுக்கீடுகள் வரவேற்கத்தக்கது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருந்து வந்த வருமான வரிவிலக்கை 31-03-2023 இல் இருந்து 31-03-2024 ஆக தளர்த்தி இருப்பது புதிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும். ஸ்டார்ட்-அப் திட்டங்களில் விவசாய துறைக்கு முன்னுரிமை அளித்திருப்பது புதிய தொழில் நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது கிட்டத்தட்ட ரூ16.8 லட்சம் கோடி அளவில் வரிச்சச்சரவு உள்ளது. இதற்கு சமாதான திட்ட அறிவுப்பு இந்த பட்ஜெட்டில் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி துறையில் கூடுதல் இணை ஆணையாளர்கள் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை கையாள்வார்கள் என்ற அறிவிப்பு ஆறுதலான ஒன்று.

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் (Productivity linked incentive scheme)எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் திட்டங்கள் அறிவித்திருந்தால் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கும்.

தற்போது அறிவித்திருக்கும் வருமான வரி சலுகைகள் புதிய வரித்திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கும் மட்டும்தான் பொருந்தும். சேமிப்பு சம்பந்தமான வரிச்சலுகை ஏதும் கொடுக்காதது, நுகர்வை அதிகரிக்கும் முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். ஒட்டுமொத்தத்தில் வரவேற்கத்தக்க பட்ஜெட்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...