கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை - அதிமுக வேட்பாளர் மீண்டும் வெற்றி!

கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கையில், அதிமுக ஆதரவு வேட்பாளர் சௌந்திரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சௌந்திரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, மற்றும் மல்லிகா ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரான சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும், சுதா 2,551 வாக்குகளும் பெற்றதாகவும், இதன் மூலம், 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து திமுக வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த ஜனவரி 5 ம் தேதி உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து கடந்த ஜனவரி 24-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முடிவுகளை அறிவித்தார். அதன்படி மொத்தம் பதிவான 5357 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் செளந்திரவடிவு 2553 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுதா 2551 வாக்குகளும், மல்லிகா 65 வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.



மேலும், இதன் மூலம் அதிமுக வேட்பாளரான சௌந்தரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் தற்போது நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் இவரே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...