உடுமலை மின்பகிர்மான திட்டமேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் இல்லை என்று அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இது உடுமலை பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்த இடமாற்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், இந்த அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற முடிவு எதுவும் செய்யப்படவில்லை என உடுமலை மின்வாரிய அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வநாதன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...