அண்ணாவின் நினைவு நாளில் எடப்பாடி ஆட்சி அமைய சபதம் எடுத்த அதிமுகவினர்!

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சபதம் ஏற்றனர்.



கோவை: பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி கோவையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய சபதம் ஏற்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் பொதுமக்கள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 40 இடங்களை பிடிக்கும் என்றும், வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும் என அண்ணா நினைவு நாளில் சத்தியவாக்கு” என சபதம் எடுத்தனர்.



இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜே.ஆர்.ஜெயராம் உட்பட அதிமுகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...