கோவையில் 'சாரங்' எனும் கிராப்ட் பஜார் 2023 கண்காட்சி தொடக்கம் - தமிழ்நாடு கைவினைக்கழகம் ஏற்பாடு!

கோவை சிங்கநல்லூரில் தமிழ்நாடு கைவினைக்கழகம் சார்பில் சாரங் எனும் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.



கோவை: சிங்கநல்லூரில் தமிழ்நாடு கைவினைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கிராப்ட் பஜாரில் 80-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.



இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

கண்காட்சியில், டை, சாய் மற்றும் பாடிக் புடவைகள், மெட்டீரியல்கள், காந்தா, கை எம்ப்ராய்டரி புடவைகள், சூட்டுகள், போச்சம்பள்ளி, மங்கல்கிரி புடவைகள், டிரஸ் மெட்டீரியல்கள், மகேஷ்வரி புடவைகள், மெட்டீரியல்கள், சரிகை பொருட்கள், பாக்ரு புடவைகள் இடம்பெற்றுள்ளன.



அதுமட்டுமின்றி, டெர்ராகோட்டா, மெட்டல், பீட் நகைகள், டஸ்ஸர் பட்டு, இயற்கை இழை தயாரிப்புகள், பட்டு பாய்கள், கையால் செய்யப்பட்ட கூடைகள், ராஜஸ்தானி ஜூட்ஸ், சணல் காலணிகள், தோல் காலணிகள், பஞ்சாபி ஜூட்ஸ், கோலாபூரி காலணிகள், டோக்ரா உலோக பொருட்கள், கலம்காரி, மதுபாணி, மினியேச்சர் ஓவியம், இயற்கையாக கையில் தயாரிக்கப்பட்ட தோல் பராமரிப்புப் பொருட்கள்,



குருவாயூர் சுவர் ஓவியங்கள், கையால் வடிவமைப்பு, டர்ரிஸ், தரை விரிப்புகள், ஜரிகை வேலை, கலை நயமான தோல் பைகள், பழங்குடியின கை எம்பிராய்டரிகள், ஒரிசா பட்டு, பருத்தி, அரக்கு நூல், மணி வளையல்கள் போன்றவை, விலை மதிப்பற்ற அணிகலன்கள், டோக்ரா ஆபரணங்கள், மர, சந்தனமரம் செதுக்குதல், குர்த்திஸ், குர்த்தாஸ்,



சூட்டுகள், மகேஸ்வரி புடவைகள், பாத், பிச்வாய், கவாட், பட்டஞ்சித்திரா ஓவியங்கள், சாஞ்சி ஓவியங்கள், டெர்ராகோட்டா, கருப்பு மட்பாண்டம், சணல் காலணி, பைகள் முதலியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 5 ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...