தாராபுரத்தில் நெடுஞ்சாலைதுறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை.



திருப்பூர்: திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் கோட்டத் தலைவர் பீட்டர் தலைமை வகித்தார்.



ஆர்ப்பாட்டத்தின்போது சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் தற்போதைய பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு விரைந்து பணி வழங்கவேண்டும்.



சாலைப்பராமரிப்பில் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளராகப் பணி வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும் புதுப்பிக்கப்படும் நெடுஞ்சாலைகளைத் தனியார் ஐந்து வருடம் பராமரிக்கும் நடைமுறையை ரத்து செய்து சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...