மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒடுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மக்களுக்கு விரோதமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.



கோவை: கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பார்க் மைதானத்தில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததற்கும், ஊரக வேலைவாய்ப்பில் முன்னுரிமை பறித்ததற்கும் கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், காந்தி பார்க் மைதானம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...