ஒரு விஞ்ஞானியின் பார்வையில் மரபணு மாற்ற பயிர்கள் புத்தகம் வெளியீடு


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பயிர் மூலக்கூறு உயிரியல் முன்னாள் இயக்குனர் டாக்டர். சதாசிவம் எழுதிய மரபணு மாற்ற பயிர்கள் ஒரு விஞ்ஞானியின் பார்வையில் புத்தக வெளியீட்டு விழா கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.



பயோடெக் முன்னணி நிறுவனங்களின் சங்க ஏபிள் ஏஜி சார்பில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் மக்கள் வேளாண் உயிரி தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ளும் வகையில் எழுதபட்டுள்ளதாகவும், மரபணு தொழில்நுட்பம் அதிநவீன வேளாண்மைக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த பயனுள்ள தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர் டாக்டர்.சதாசிவம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் கூறும்போது, இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளதாக கூறினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சோயா, மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு வகை மரபணு மாற்றப்பட்ட தானியங்கள் பயிரிடப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஆய்வில் மனித உடலில் 145 வித மரபணுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியவர், மரபணு மாற்றம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்கள் அளிக்கபட்டுள்ளதாக கூறினார்.



கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து 2016 வரை மரபணு மாற்றப்பட்ட பருத்தியை 135 லட்சம் பேர் பயிரிட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 350 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார். மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வருமானம் பெருக்க இதை உபயோகிப்பது குறித்து விவசாயி தான் முடிவு செய்ய வேண்டும் என்றவர், புதிய ஆராய்ச்சிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்குவிப்பதில்லை என்றார்.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராசி சீட்ஸ் தலைவர் ராமசாமி, உயிரி தொழில்நுட்ப நிறுவன சங்க செயல் இயக்குனர் ஷிவேந்திர பஜாஜ், கோவை வேளாண் பல்கலை நிறுவன இயக்குனர் ரங்கசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...