கோவையில் போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மாநகர காவல் ஆணையர் சாகசம்

கோவையில் நடைபெற்ற போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரோப் கட்டி 3வது மாடியில் இருந்து சரசரவென இறங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு சிறப்பு பணிக்குழு சார்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றது.



கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் டி-பிரிவு போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு பணி குழு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.



இந்த பயிற்சியில் கோவை மாநகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.



இதில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது, மறைந்திருக்கின்ற குற்றவாளிகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இதைத்தொடர்ந்து நிறைவு நாளான இன்று டெமோ வகுப்பு நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை காவல் ஆணையர் பாராட்டினர்.



இந்நிலையில் கமிஷனர் பாலகிருஷ்ணன் மூன்றாவது மாடியில் இருந்து ரோப் மூலம் இறங்கி சாகத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...