கோவையில் சாரங் எனும் தலைப்பில் கோடை கால கண்காட்சி - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில், தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் "சாரங்" என்ற தலைப்பில் கோடை கால இரண்டு நாள் (பிப் 3-4) கண்காட்சி நடைபெற்றது.



கோவை: கோவையில் கடந்த பிப்ரவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் சாரங் எனும் கோடை கால கண்காட்சி நடைபெற்றது.



தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக கோவை சிங்காநல்லூரில் கோடைகால கண்காட்சி நடத்தப்பட்டது.



சிங்காநல்லூர் அடுத்த பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோட்டில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்றது.



கடந்த 3ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கோடை கால மாதங்களில் அணிந்து மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியின் துவக்க விழாவில், கோவை வருமானவரி துறை முதுநிலை ஆணையாளர் பூபால் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முன்னாள் தலைவர் சபிதா சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.



நாடு முழுவதும் உள்ள பல்வேறு கைவினை கலைஞர்கள் தயாரிப்பிலான பொருட்கள், இளைய தலைமுறையினர் கவனமுடன் தயாரித்த, நிலையான வேலைப்பாடுகள் கொண்ட புதுமையான வடிவமைப்பிலான ஆடைகள் அதிக அளவில் இதில் இடம்பெற்றன.



மேலும், பல்வேறு விதமான வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.



இந்த கோடை கால கண்காட்சிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்து, உடைகள், அலங்காரம் மற்றும் கைவினை பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதனிடையே பசியுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவளிக்க கொங்கு நாட்டு சமையல், சுஷி, சாலட் பவுல், சாக்லேட், பட்டிசெரியே, ஜூஸ், சான்ட்விச், ஐஸ்க்ரீம் மற்றும் உள்ளுர் சுவையான சிற்றுண்டிகளும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...