கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது - செல்போன், போதை மாத்திரைகள் பறிமுதல்!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அவ்வப்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பஜார் காவல்நிலைய இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளடக்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. போலீசார் கண்காணித்ததில், சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேரும் போதைக்காக மாத்திரையை விற்பனை செய்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.



இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...