கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்? - பரபரப்பு

சேலம் அருகே வனத்துறை வாகனம் மோதி லேத் பட்டறை ஊழியர் உயிரிழந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை வழங்காததால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு.


கோவை: சேலம் மாவட்டத்தில் வனத்துறை வாகனம் மோதி பலியானவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(39). லேத் பட்டறை தொழிலாளியான இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38) உடன் சோலையார் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த வனத்துறை வாகனம் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார்.

இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் சத்தியமூர்த்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ. 20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு 2020ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை நீதிமன்ற அமீனா மருதையன் மற்றும் சேலம் நீதிமன்ற அமீனா சண்முகம் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 1 கார், 3 ஜீப், 25 கம்ப்யூட்டர் போன்ற ரூ.34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், ஒரு நாள் அவகாசம் தரும்படி ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கோரியதால், ஜப்தி செய்யாமல் நீதிமன்ற ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...