கோவை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 1,099 மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கல்.


கோவை: புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தினை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினால் துவங்கப்பட்டது.

பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல். பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண்குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் இரண்டாம் கட்ட திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.



அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கும் விதமாக 88 மாணவிகளுக்கு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி, கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் மண்டலக்குழுத் தலைவர் (மேற்கு) தெய்வானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 5026 மாணவியர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது, இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற இவ்விழாவில் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...