ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் - கோவை அரசு மருத்துவமனையில் பணிகள் பாதிப்பு!

கோவையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை அமலுக்கு வராத நிலையில் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.



கோவை: ஊதிய உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் ஊதியமாக தரப்படுகிறது. இந்த ஊதியம் உயர்த்தப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 721 ரூபாய் ஆக வழங்க கடந்த ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் இன்று வரை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்காததால்அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வருகின்றனர்.



இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கப்படாத நிலையில் தங்களுக்கு ஊதிய உயர்வையாவது உடனடியாக அமல்படுத்த வேண்டும்என இந்தப் போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.



ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் தோய்வடைந்து உள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதனையடுத்து ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் போராட்ட குழுவினருடன் நடத்தியபேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் தாசில்தார் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...