கோவை கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கோவை மக்களின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாநகரின் 'காவல் தெய்வம்' என்றழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இத்திருக்கோயில், கோவை மாநகர மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட திருக்கோயில். கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகுகோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், மிகமிக முக்கியமான திருவிழாவாகும். லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள்.

எனவே அருள்மிகு கோனியம்மன் திருத்தேரோட்டம் நடக்கும் நாளன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று கோவை மாநகர மக்களும், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் பக்தர்களும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை ஏற்று, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது, கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.



இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...