கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - கோவை ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும் வருடம் தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இத்தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...