உடுமலையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

உடுமலை கால்நடை மருத்துவனை சார்பில், நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற செல்ல பிராணிகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உடுமலை கால்நடை மருத்துவமனை சார்பில், நேதாஜி மைதானத்தில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.



திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தலைமை மருத்துவர், செல்லப் பிராணிகளால் பரவும் நோய்கள் குறித்து விளக்கினார்.

நாய்கள் வளர்ப்போர் 3 மாத காலத்தில் இருந்து ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ஆண்டு தோறும் தடுப்பூசி போட வேண்டும். பிராணிகள் கடித்தால் கடித்த இடத்தில் சூடு வைப்பது, மஞ்சள் தடவுவது, உப்பு தண்ணீர் ஊற்றுவது, கிருமிநாசினி தடவுவது கூடாது. பதிலாக கடித்த பகுதியில் சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட வேண்டும். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.



மேலும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம் கூறுகையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் அருகில் வசிப்போருக்கு தொல்லையின்றி வளர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே பிராணிகளை வளர்க்க வேண்டும், என்றார்.

இந்த முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பராமரிப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...