கோவை அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

ஊதிய உயர்வு, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்தார்.

அதன்பின்னர் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இருப்பினும் பல மாதங்களாக அந்த தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி நேற்று 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



அவர்களிடம் மருத்துவமனை முதல்வர் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.



இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றை விட இன்றைய தினம் அதிகப்படியான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...