விடுதி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொந்தரவு - கோவை விடுதிகள் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

சரக்கு மற்றும் சேவை வரி சோதனை என்ற பெயரில் அலுவலர்கள், விடுதிகளில் உள்ள பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு.



கோவை: கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தங்கும் விடுதிகளில் சரக்கு மற்றும் சேவை வரி பிரிவினரால் ரெய்டு செய்யப்பட்டு பெரிய தொகை வரியாக செலுத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். அந்த அலுவலர்கள் கேட்கும் வரியானது ஹோட்டல்களுக்கு உண்டானது. மாறாக அதனை விடுதிகளுக்கும் சேர்த்து தர சொல்லுவது வருத்தத்திற்குரிய செயலாக கருதுகிறோம்.

ரெய்டு என்ற பெயரில் தங்கள் அலுவலர்கள் எங்களிடமும் தங்கியுள்ள பெண்களிடமும் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுகொள்வதாக இல்லை. எனவே ஆண்கள்/ பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு வரி வசூலிப்பதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடை செய்ய வேண்டும்.

ரெய்டை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், சரக்கு மற்றும் சேவை வரிகள் பொருந்தும் பட்சத்தில் அதை உரிய விளக்கத்துடன் எங்களுக்கு தெரியப்படுத்தி வழி காட்ட வேண்டும், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.



இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மனுவின் நகல்களை முதலமைச்சர், மத்திய நிதி அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், வணிகவரித்துறை ஆணையாளர் ஆகியவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...