கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஃபெர்டிலிட்டி மருத்துவர் தகவல்


கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-



"விளக்கமுடியாத மகப்பேறின்மை" என்பது காரணம் கண்டறியப்பட முடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைப் பெறின்மை ஆகும்.

90 சதவிகித தம்பதியரில் கருத்தரிக்காததற்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் ஆணிடமோ, பெண்ணிடமோ குறைபாடுகள் உள்ளதை அறியலாம். சில சமயம் ஆண், பெண் என இருவரிடமும் குறைகள் இருப்பதைக் கண்டறியலாம்.

பொதுவாக குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் தம்பதியருக்கு கருக்குழாய் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் காரணம் அறியாத நிலையில் அவர்கள் விளக்கமுடியாத மகப்பேறின்மையில் அடக்கப்படுகிறார்கள்.

கோவையில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் இத்தகைய விளக்க முடியாத குழந்தையின்மை இருப்பது தெரிகிறது. இத்தகைய விளக்க முடியாத மகப்பேறின்மையில் கருமுட்டை, விந்தணு போன்ற அடிப்படை நிலையில் குறைபாடுகள் இருப்பதார் சாதாரண பரிசோதனைகளில் கண்டறியப்பட முடிவதில்லை.

சாதாரணமாகத் தெரியும் விந்தணு, கருமுட்டை கூட கருவாகும் தன்மை அற்றுப் போகலாம். மைக்ரோஸ்கோப்பியில் நன்றாகத் தோன்றும் கரு, கருப்பையில் பொருந்தாமல் போகலாம். இவை சாதாரண பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கருமுட்டை தரம் குறைபாடு, விந்தணு செயல்திறன் குறை, கருப்பை இருந்தும் ஒட்டாமல் இருக்கும் தருணம்போல கண்டறிய முடியாத மகப்பேறின்மைக்கு IVF தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழியாகும்.

விளக்கமுடியாத மகப்பேறின்மை கொண்டோர் பல பரிசோதனைகள் மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி விரக்தியில் இருக்கும நிலையில் IVF சிகிச்சை முறையில் கருவுற்றவுடன் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...