கோவையில் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் ஆய்வு - சிறந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கல்

கோவை மாநகரில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபிடிஜிபி சங்கர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் பிற உயர் காவல் அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் ஆலோசனை நடத்தினார்.



கோவை வந்த தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் கே. சங்கர், கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மற்றும் பிற உயர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் உள்ள அன்றாட அலுவல்களை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறையால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள காவல் நிலைய வரவேற்பாளருக்கான மேசைக் கணினி மென்பொருள் மற்றும் பீட் காவலருக்கான "ஸ்மார்ட் காவலர்' என அழைக்கப்படும் மின்னணு ரோந்து (E-Beat) செயலி ஆகியவற்றின் பயன்பாடு, கோவை மாநகர காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களிடையே எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார்.

கோவை மாநகரில் E-Beat மூலம் 5881 இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் உரையாடி கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

மேலும், முதல்வர் உத்தரவுப்படியும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தலின் படியும் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஒவ்வொரு புதன் கிழமையும் சிறப்பு மனு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, கோவை மாநகர பந்தயச் சாலை மற்றும் இராமநாதபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று அங்கு நிலைய வரவேற்பாளருக்கான மென்பொருளின் உபயோகம் குறித்து தணிக்கை செய்தும், அதனை உபயோகிக்கும் பெண் காவலரிடம் அம்மென்பொருளைக் கொண்டு காவல் நிலையத்தில் பெறப்படும் மனுக்கள் எங்கனம் பதிவு செய்யப்படுகின்றன, மனுக்களின் மீதான நடவடிக்கைகள் எங்கனம் பதிவேற்றம் 'செய்யப்படுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

கொலை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (POCSO, 2012), தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கெதிரான வழக்குகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் பெற்றுத் தருவதற்காகக் கோவை மாநகர காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், எத்தனை வழக்குகளில் நிவாரணத்தொகை பெறப்பட்டுச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் கொடும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். குற்றங்களால் பாதிக்கப்பட்டோரிடம் வழக்கின் தற்போதைய நிலை பற்றியும், நிவாரணத்தொகை பெற்றுவிட்டார்களா என்பதையும், பாதுகாப்புக் குறைகளையும், பிற குறைகளையும் கேட்டறிந்தார்.



கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் திறம்பட நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததுடன் திருட்டுச் சொத்துக்களையும் மீட்ட காவல் துறையினருக்கும் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டு விரைவாகச் சம்பவ இடங்களுக்குச் சென்று பிரச்சினையைக் களைந்து கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை திறம்பட பேணிய காவல்துறையினர் 41 பேருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து பண வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார்.

குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டமைக்காக கோவை மாநகர சி2.பந்தயச் சாலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தலைமையிலான தனிப்படையினர், பி1.பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான தனிப்படையினர், சி4.ரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கிய தன்சீலன் தலைமையிலான தனிப்படையினர், டி1.ராமநாதபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரபா தேவி தலைமையிலான தனிப்படையினர்,

ஈ2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர், டி2.செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினர், காவல் உதவி ஆணையர்கள் பார்த்திபன் (சிங்காநல்லூர் சரகம்), ரகுபதிராஜா (குனியமுத்தூர் சரகம்) மற்றும் சதீஸ்குமார் (போத்தனூர் சரகம்) மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கவனமாக கையாண்டு சிறப்பாக பணியாற்றியமைக்காக சி1.காட்டூர்.



இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, கோவை மாநகர பகுதியில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்துக் கேட்கப்பட்டது.

இதில் சிலர் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவை மாநகர பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தினத்தையொட்டி (பிப்ரவரி-14) அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க 2 டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டு, 18 உதவி கமிஷனர்கள், 225 கமாண்டோ போலீசார், 100 அதிவிரைவுப்படை போலீசார் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பு பணியைத் தொடங்கி உள்ளனர். வாகன சோதனை, வெளிமாநில நபர்கள், தங்கும் விடுதியில் தங்கி இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் சமூக வலைத்தளத்தில் பிரச்சினைக்குரிய தகவலை யாராவது பதிவேற்றம் செய்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...