சூலூர் கலங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.


கோவை: சூலூர் கலங்கள் பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சூலூர் கலங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்று போலீசார் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தோபா பிரிதான் (23) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனைகளும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...