கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத்தூண் - ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மாதிரி தூணுடன் வந்து இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.


கோவை: இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 58 பேருக்கு நினைவு தூண் அமைத்திட கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



அப்போது, கோரிக்கை மனுவுடன், நினைவுத்தூணுக்கான மாதிரி மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் வந்திருந்தனர்.



மேலும், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு, தங்களது இயக்கத்தின் சார்பில் தற்போதைய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் லோட்டஸ் மணிகண்டன் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...