வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை - பொதுமக்கள் அச்சம்!

வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில் வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் கூட்டமாகவும், குட்டியுடன் மற்றும் தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன.

குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தும் யானைகள், வாழைமரம் பலா மரம் போன்றவற்றையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று காலை வால்பாறை அருகேயுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை, தேயிலைத் தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயேவிரட்டினர். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...