ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவு.


கோவை: ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு காந்தி பிறந்த நாளையொட்டி அக்டோர் 2ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது. ஆனால் இந்த அணிவகுப்பு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை உள் அரங்குகளில் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. மற்ற மதத்தினரை புண்படுத்தும்படி கோஷங்களை எழுப்பக்கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...