ரவுடிகள் கூட திமுக அரசை கண்டு பயப்படுவதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு இந்தியா அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது கூட பாசம் இல்லை என்றும், ரவுடிகள் கூட திமுக அரசை கண்டு பயப்படுவதில்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.



கோவை: ஆர்.எஸ் புரம் பகுதியில் பாஜக சார்பில் கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து, மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998இல் கோவை தொடர்க் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி, பொருளாளர் சேகர், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது. "இந்த சமய மக்கள் ஒன்று சேருவோம்" எனக் கூட்டாகப் பாடலும் பாடினர்.



கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்க் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 25 ஆண்டுகள் கழிந்துள்ளது. பலர் சொந்தங்களை இழந்து தவித்தனர். இறந்தவர்களுக்கு ஒரு நினைவு தூண் கூட இல்லை. இதனை மறக்க வேண்டும் என அரசு நினைத்து இன்று வரை வைக்கவில்லை. அத்வானி வருவதற்குத் தாமதமானதால் அன்று தப்பினார். இறந்தவர்களுக்கும், கோவை வடுவுக்கும் மருந்தாகத் தூண் இருந்திருக்க வேண்டும்.

பாஜக நிச்சயம் ஆட்சியில் அமரும். அப்போது கோவையில் நினைவு தூண் அமைப்போம் என அரசுக்கு செய்தியாகச் சொல்லிக் கொள்கிறோம். நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் உள்ளது. இந்து பண்டிகைகளைக் குறி வைத்து குண்டுகள் வெடிக்கின்றன. 2014 இல் மோடி பொறுப்பு ஏற்ற பிறகு ஏதாவது பொதுமக்கள் நடமாடும் இடத்தில் குண்டு வெடித்தது உண்டா? 2014 -2023 வரை மோடி ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு ஆகும்.



2019-யை ஒப்பீடுகையில் 2022 இல் கோவை உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2022இல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் மக்கள் இறப்பை கோட்டை ஈஸ்வரன் காத்தார். முபின் பஜ்ஜி போட்டுக் கொண்டு இருந்த போது சிலிண்டர் வெடித்தது என்று கூறியது போல அரசின் பதில்கள் இருந்தது.

என்ஐஏ அறிக்கை தாக்கல் செய்யும் போது திமுக-வின் ஆட்சியின் நிலை குறித்து தெரியும். திமுக ஆட்சிக்கு இந்தியா அல்ல, தமிழ் நாட்டு மக்கள் மீது கூட பாசம் இல்லை. கோவையில் நடந்த கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப் பட்டதை காவல்துறை மறைக்கிறது. மும்பையிலிருந்து இறங்கிய கும்பல் ஒருவரை துரத்தி, அவர் வீட்டிற்குள் புகுந்து தப்ப முற்பட்ட போது வாய்க்குள் துப்பாக்கி வைத்துச் சுட்டுள்ளனர்.



ரவுடிகள் கூட திமுக அரசை கண்டு பயப்படுவதில்லை. முகக்கவசம் கூட இல்லாமல் துணிச்சலாகச் செய்கிறார்கள். கொலைக் குற்றவாளிகள் சீக்கினால் திமுக ஒன்றிய செயலாளர்களிடம் சென்று தப்பிக் கொள்வார்கள். உண்மையாகவே போலீஸ் அகாடமி பயிற்சி பெற்று உள்ளீர்களா? தேசியக் கொடியின் மீது சத்தியம் செய்து உள்ளீர்களா? என மாநகர காவல்துறை ஆணையருக்குக் கேள்வி எழுப்பினார்.

பங்களாவில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எங்களுக்கு அன்றாடம் கட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். காவல்துறை மீது எங்களுக்கு கோபம் இல்லை. காவல்துறையின் முன் கள பணியாளர்கள், காவலர்களுக்காக நாங்கள் பேசுகிறோம். எவ்வளவு பதக்கங்களை நீங்களே உங்களுக்கு கொடுத்தாலும் உள்துறையில் திமுக தோல்வியே ஆகும்.

அடித்தால் திருப்பி அடிக்கும் பாணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அதனால் தான் புல்வாமா உள்ளிட்ட விவகாரங்களில் பதிலடி கொடுக்க முடிந்தது. பாதுகாப்பு துறைக்கு சுதந்திரம் கொடுப்பது மோடி அரசு. ஆனால் திமுக ஆட்சியில் முதல்வர் குறித்து விமர்சிப்பவர்களை மட்டும் காவல்துறை கைது செய்கிறது. சும்மா இருந்தால் கூட அரசியல் பேச வேண்டும், காஷ்மீர் அமைதி குறித்து, மோடி ஆட்சி குறித்து நல்ல அரசியலை பேச வேண்டும் என்றார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அப்போது தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தொடர்பாக பட்டியலை வாசித்து பேச தொடங்கிய அவர், 10 மாத காலமாக 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பதிவாளர்கள் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள் என குற்றம்சாட்டினார். 

இவர்களுக்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் என்ன தொடர்பு என்பது தெரிய வேண்டும். 15 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லை எனில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் புகைப்படம் கொண்டு போஸ்டர் அடிப்போம் என கூறினார். அரசு அதிகாரி பெயரை கூற கூடாது என்பது மாண்பு. இந்த விவகாரத்தில் வேறு வழி இல்லை நடவடிக்கை இல்லை எனில் போஸ்டர் அடிப்போம் என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், போன வாரம் 2 கிலோ மட்டன் கொடுக்கிறார்கள். பிரசாரத்தில் இன்று புடவை கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் நேருவும், இளங்கோவனும் பேசியது தொடர்பாகவும் நடவடிக்கை இல்லை. ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. முன்னாள் மாநில தலைவர் சிபிஆர்-க்கு நாளை பிரிவு உபசாரம் நடக்க உள்ளது. அரசியல் கட்சியிலிருந்து ஆளுநர் பணிக்குச் செல்கிறார் என்றார்.

மேலும் கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலை எடுத்துள்ளது. வெடிகுண்டு வந்து சென்ற 3 மாதத்தில் துப்பாக்கி வந்துள்ளது. என்னவென்று கேட்க கூட அமைச்சர்கள் வரவில்லை. ஈரோட்டில் ஒபிஸ் உடன் பொதுக் கூட்டம் நடப்பது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் தான் போட்டிப் போட்டு ஆட்சிகளைக் கலைத்தவர்கள். நெடுமாறன் கருத்து தொடர்பாக கேட்டதற்கு அரசு (இலங்கை) சொல்லும் போது அரசாக ஏற்கலாம் என்றும், காதில் கேட்டதை வைத்து அரசு இயங்க முடியாது. கடந்தாண்டு பேசிய நெடுமாறன், இலங்கைக்கு பிரச்னை தீர்வு என்றால் மோடியால் தான் முடியும் என்று கூறியதையும் பார்க்க வேண்டும். பிபிசி அலுவலகத்தில் வருமான வரிச்சுதனை என்பது தகவல்கள் அடிப்படையில் அதிகாரிகள் வட்டத்தில் நடக்கிறது. அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். அரசு சொல்லி எடுக்கவில்லை என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...