கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு

கோவை டி.கே மார்க்கெட்டில் ஒரு கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி. விலை அதிகரித்து காணப்பட்டதால் முருங்கைக்காய் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கவலை.


கோவை: கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டினர்.

கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளை கிழக்கு போன்றவை வருகின்றன. இங்கு வரும் காய்கறிகளைக் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.

அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும், காய்கறிகள் விலை கடைகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறுகையில், டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெட்டுகளிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மொத்த விற்பனை விலையில், கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கைக்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...