கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு, சாக்கடை சுத்தம், குப்பை சேகரிப்பு, குடிநீர் குழாய் பழுதுபார்ப்பு ஆகிய பணிகளை இன்று ஆய்வு செய்து தரமான பணி செய்ய உத்தரவிட்டார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ல் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் நல திட்டங்களை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 27-ல் உள்ள பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் இன்று DBC பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டதுடன், தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தும் ஊற்றப்பட்டது. பொதுமக்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு கவுன்சிலர் அறிவுறுத்தினார்.



அதேபோல் பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் குடிசைப் பகுதியில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்குமாறும், சாலையை தரமாக அமைத்து தருமாறும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.



பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த செடிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோர செடிகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.



பீளமேடு கல்கி நகர் பகுதியில் தினசரி குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டி முறையாக வருகிறதா மற்றும் சாலையோரக் குப்பைகள் தினசரி அகற்றப்படுகிறதா என்பது குறித்து கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை முறையாகப் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.



பீளமேடு பூசாரி ராமா வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி நிறைவடைந்ததும் தோண்டப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து, சாலையை முறையாக சீரமைக்குமாறு சூயஸ் நிறுவன சூப்பர்வைஸரிடம் அறிவுறுத்தினார். வாட்டர்மேன் மாகாளி உடன் இருந்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...