கோவை தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு - கொத்தாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்!

கோவையில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 250க்கும் மேற்பட்டோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களில் அதிகம் பேர் கல்லூரி மாணவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் நடக்கும் பல விபத்துக்களில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற பலரும் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பரப்புரைகளை கோவை மாநகர காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது.

மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருவோர் மீது, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வழக்குப்பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்படுகிறது. கடந்த ஏழாம் தேதியன்று, பொள்ளாச்சி சாலையில், தலைக்கவசம் அணியாமல் வந்த பலருக்கும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில் சிலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியான கல்லுாரி மாணவர்கள் செல்வது தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில், உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பினர் போலீசாருடன் இணைந்து, கல்லுாரிகளின் முன்பாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர். ரத்தினம் கல்லூரி, எல்.ஐ.சி., காலனி, நேரு மற்றும் கிருஷ்ணா கல்லூரிகள் முன்பாக, போலீசார் வாகன சோதனையும் மேற்கொண்டனர்.

காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் நான்கு இடங்களிலும் சேர்த்து, 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள் தான் அதிகளவில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதியோர், பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,கள் செல்வகுமார், ரங்கதுரை, அர்த்தநாரி, எஸ்.எஸ்.ஐ. அருள்துரை, ஏட்டுகள் இளங்கோ, கற்பூரசுந்தரபாண்டியன், ராஜா ஆகியோருடன் அந்தந்த கல்லூரி மாணவர்களும் இந்த விழிப்புணர்வு பரப்புரையில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...