பிரபாகரன் விவகாரம் - பழ.நெடுமாறனிடம் விசாரணை நடத்த டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள விவகாரம் குறித்து பழ.நெடுமாறனிடம் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை இறுதிப்போரின்போது மரணமடைந்ததாகக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நலமாக இருப்பதாகவும், விரைவில் மக்கள் முன்தோன்றுவார் என்றும் அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இலங்கையில், 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி போரில், முள்ளிவாய்க்காலில் மட்டுமே, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மூன்று லட்சம் பேர் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப் படவில்லை.

இந்நிலையில், பழ.நெடுமாறன், 'பிரபாகரன் உடல் நலத்துடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளிப்படுவார்' என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால் தமிழர்களுக்கு மிக மகிழ்ச்சிதான். அதே சமயத்தில் ஒரு பரபரப்பை உருவாக்க அல்லது வேறு அரசியல் உள்நோக்கத்துக்காக பழ.நெடுமாறன் இப்படி தெரிவித்து இருந்தால், அது மிகப்பெரிய ஏமாற்றமாகிவிடும்.

பழ. நெடுமாறனிடம் மத்திய, மாநில அரசுகள் உளவுத்துறையைக் கொண்டு ரகசிய விசாரணையை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...