கோவையில் மக்கள் நல்வாழ்வு துறையில் சார்பில் கலந்தாய்வு கூட்டம் - அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.



முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தார்களின் கருத்துக்கள் அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு இத்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டன.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:



மாநில திட்டக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவு செய்தார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் இது ஒரு முன் மாதிரி முயற்சி.

மக்கள் நல்வாழ்வுத் துறையை சிறப்பாக வளர்க்க முன்னெடுக்க நல்ல முயற்சி. புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் நிலையில் உள்ளன.

750 புதிய 108 வாகனங்கள், காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்-ரே வசதி உடன் 23 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் லஞ்ச புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோழிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ரேண்டம் சோதனை நடக்கிறது.

இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...