கோலாகலமாக துவங்கியது ஈஷா மகா சிவராத்திரி விழா - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், இந்த நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார். முன்னதாக அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.


கோவை: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் குடியரசு தலைவர் சென்று தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார்.



மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். குடியரசு தலைவர் முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.



பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி மும்மு பங்கேற்றார். மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...