கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம் - மக்கள் விடுதலை முன்னணி புகார்!

கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள் விடுதலை முன்னணியினர், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கு மண்டல அமைப்பாளர் ராஜன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அறிவித்துள்ள நேரத்தை தாண்டியும் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், இதுபோன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜன் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...